முழு அடைப்பு: டாஸ்மாக் கடை மட்டும் திறந்திருந்தன!

Must read

ஆட்டோ ஓட்டுனர்கள் போராட்டம்
சென்னை:
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி, இன்று நடந்த முழு அடைப்பு போராட்டத்தில் மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டதால் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் மதுக்கடைகள் மட்டும் திறந்திருந்தன.

ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பதால், கடந்த மூனறு வருடங்களாக ஜல்லிக்கட்ட நடத்த முடியாத நிலை. ஆனால் இந்த வருடம் மாணவர்கள், கிளர்ந்தெழுந்து, ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி போராடி வருகிறார்கள். பொதுமக்களும் இந்த போராட்டத்தில் ஆர்வத்துடன் பங்குபெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில், இன்று ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி தமிழகம் முழுதும் கடை அடைப்பு நடந்தது. வணிக வளாகங்கள், மருந்து கடைகள், பெட்ரோல் பங்குகள் உட்பட அனைத்துக் கடைகளும் இன்று மூடப்பட்டிருந்தன.
ஆனால் தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகள் மட்டும் இன்று திறந்திருந்தன.

More articles

Latest article