தமிழகத்தில் ஜல்லிகட்டுக்காக போராடி வந்த இளைஞர்களை போலீசார் வலுக்கட்டாயக வெளியேற்றியதால் போராட்டம் வெடித்தது.

இந்த போராட்டம் வன்முறையாக மாறியதால் பல இடங்களில் போலீசார் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டு வீசி போராட்டத்தை அடக்கினர்.

இந்த போராட்டத்தில் பல மாணவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களை போராட்டத்தை கைவிட கோரி, நடிகர் சிம்பி, ராகவா லாரன்ஸ், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதைத்தொடர்ந்து மைலாப்பூர் போலீஸ் உதவி கமிஷனரும் போராட்டக்காரர்களுடன் பேசினார்.

அதைத்தொடர்ந்து, இன்று மாலை 5 மணிக்கு கூட இருக்கும் சிறப்பு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ள சட்ட முன்வரைவு, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டவுடன், அதன் நகல் பார்த்ததும் போராட்டத்தை முடித்துக்கொள்வதாக கூறியுள்ளனர்.

சென்னை மெரினாவிலும், திருச்சியிலும் நடைபெற்று வரும் போராட்டம் இன்று மாலையுடன் முடிவுக்கு வருகிறது…