டில்லி,
ல்லிக்கட்டுக்கு தடை விதித்த உச்ச நீதி மன்ற மனுவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதி மன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
மேலும் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என்றும் அறிவித்து உள்ளது.
jallikatu-sc1
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரும் தமிழக அரசின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது. ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து பிறப்பித்த உத்தரவு தொடருவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு தமிழகத்தில் ஜல்லி கட்டு நடத்தலாம் என்று மத்திய அரசு ஒரு உத்தரவிட்டது. ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பீட்டா மற்றும் விலங்குகள் நல அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன.
இதனால் ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதன் காரணமாக ஜனவரி மாதம் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு கடைசி நேரத்தில்  தடை செய்யப்பட்டது.
இத்தடைக்கு எதிராக தமிழக அரசு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது. இம்மனு மீதான வழக்கின் இறுதி விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது,தமிழக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர்,  குதிரைப்பந்தயங்களுக்கு தடை விதிக்கப்படவில்லை. பட்டாசுகளுக்கு தடை விதிக்கவில்லை. ஆனால் ஜல்லிக்கட்டுக்கு மட்டும் தடை விதிக்கப்படுவது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
sc
ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதிகள்,  ஜல்லிக்கட்டை பொழுதுபோக்காக நடத்த முடியாது; மத ரீதியான நிகழ்ச்சியாகவும் பார்க்க முடியாது; ஜல்லிக்கட்டு என்பதே கொடூரமானது. ஆகையால் தமிழக அரசின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து வரும் ஆண்டில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.