
டில்லி,
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நிச்சயம் நடைபெறும் என நம்பப்படுகிறது.
தமிழர்களின் எழுச்சிமிகு போராட்டத்தினால் மத்தியஅரசு அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது.
இதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு குறித்து எந்தவிதமான தீர்ப்புகளையும் வழங்கக்கூடாது என்று மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் கோரிக்கை வைத்தது. மத்தியஅரசின் கோரிக்கையை உச்சநீதி மன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது.
பொங்கலுக்கு முன்பே ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு வரும் என எதிர்பார்த்த நிலையில், உடனே தீர்ப்பு எழுத முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இன்னும் ஓரிரு நாளில் ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு வர இருந்த நிலையில், தீர்ப்பை இரண்டு வார காலத்துக்கு தள்ளி வைத்துள்ளது உச்சநீதிமன்றம்.
தமிழக மக்களின் தீவிர போராட்டத்திற்கு மத்தியஅரசு பணிந்தது என்றே சொல்லலாம். அதற்கு தகுந்தார்போல தமிழகஅரசு மூலம் அவசர சட்டம் இயற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்த அவசர சட்டத்திற்கு உச்சநீதி மன்றம் எந்தவிரத குறுக்கீடும் செய்யாமல் இருப்பதற்கு ஏதுவாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்ககி, விடுத்த கோரிக்கையை அடுத்து உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஜல்லிக்கட்டு தீர்ப்பு தமிழகத்திற்கு ஆதரவாக வந்தால் எந்தவித பிரச்சினையும் இல்லை. ஆனால், மாறாக தீர்ப்பு வந்தால் பிரச்சினை மேலும் சிக்கலை ஏற்படுத்தி விடும் என கருதியே மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதுபோல் தமிழக அரசு கொண்டுவர இருக்கும் அவசர சட்டத்துக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல இருக்கவும் மத்தியஅரசு முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக தமிழக இளைஞர்களின் எழுச்சி வெற்றிபெற்றதே என்று சொல்லாம். இருந்தாலும், தமிழக அரசு சட்டம் இயற்றுவரை பொறுமை காப்பதே சிற்நததது.
தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்த மறுநாளே, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும். தமிழர்களின் பாரம்பரியம் காக்கப்படும்,
ஜல்லிக்கட்டு காளைகள் தமிழக மண்ணில் ஓடும், அதை காளையர்கள் அடக்கி தங்களது வீரத்தை நிலைநாட்டுவார்கள் என்பது நிச்சயம்.
[youtube-feed feed=1]