மலேசியாவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

மலேசியா,

மிழ்நாட்டில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

வெளிநாடுகளிலும் தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்காக குரல் கொடுத்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் கலந்துகொண்டு அமைதியான முறையில் போராடி வருகின்றனர். கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.  மாணவர்களின் எழுச்சிமிகு போராட்டத்தால் தமிழகமே ஸ்தம்பித்து உள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் விடிய விடிய இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மதுரை தமுக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு, கொட்டும் பனியில் துவங்கிய மாணவர்கள் போராட்டம், நேற்று கொளுத்தும் வெயிலிலும் தொடர்ந்தது.

இதேபோல நெல்லை, சேலம், கோவை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் வசிக்கும் தமிழர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் ஆங்காங்கே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, துபாய், இந்தோனேஷியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் தமிழர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக  போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

லண்டனில் நடைபெற்ற போராட்டம்

மலேசியாவில்…

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி மலேசியாவில் புகழ்பெற்ற பத்துமலை முருகன் கோவில் அருகே இன்று பேரணி நடக்க இருக்கிறது. நேற்று அங்குள்ள மலேசிய வாழ் தமிழர்கள் ஒன்றுகூடி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிங்கப்பூரில்…

சிங்கப்பூரில் தமிழர்கள் போராட்டம்

சிங்கப்பூரிலும் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும்  சிங்கப்பூர் தமிழர்கள் கலந்துகொள்ள இருக்கும் அறப்போராட்டம் வரும் 21ந்தேதி மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறும். இந்த போராட்டம் செம்பவாங் என்ற இடத்தில் நடைபெறுவதாகவும், போராட்டத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் கருப்பு உடை அணிந்து வரும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

துபாயில்….

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி வெளிநாடுகளிலும் தமிழர்கள் ஆதரவை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்று ஆஸ்திரேலியா, துபாய், அமெரிக்கா, சிங்கப்பூர், இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு பெருகியுள்ளது.

 

அமெரிக்காவில்…

அமெரிக்காவில் 25 இடங்களில் தமிழ் அமைப்புகள் ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தி வருகின்றனர். வட அமெரிக்காவின் ஜெயின்லூயிஸ் நகரத்தில் தமிழ் இளைஞர்கள் பறையடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில்…

ஆஸ்திரேலியாவில்  . ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி வெளிநாடுகளிலும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியாவை தொடர்ந்து துபாயிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இலங்கையில்..

இலங்கை யாழ்பாணத்தில் இளைஞர்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்றும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அலங்கா ‘நல்லூர்’ ஆடும் வரை ஈழ ‘நல்லூர்’ அடங்காது என்றும், தமிழனத்தின் தனித்துவத்தை தடுக்காதே என்றும் தலைகுனியும் நிலையில் தமிழன் இல்லை என்றும் இளைஞர்கள் முழக்கமிட்டனர்.