வாஷிங்டன்,

ந்தியாவைபோல குடும்ப ஆட்சியை ஆரம்பித்து வைத்துள்ளார் புதிய அதிபர் டொனால்டு டிரம்ப்.

கடந்த வருட இறுதியில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற்று அதிபராக பதவி ஏற்க உள்ளார். வரும் 20ந்தேதி டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்க இருக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் மாளிகையான,  வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகராக ட்ரம்பின் மருமகன் ஜேரட் கஷ்னர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

அமெரிக்காவில் நடைபெற்ற அதிபலிர தேர்தல் பிரச்சாரத்தின்போது, அதிரடி பேச்சுகளை பேசி சலசலப்பை ஏற்படுத்தி வந்தவர் டிரம்ப். அவரை தனது கட்டுப்பாட்டுக்ள்கு கொண்டுவந்து, மக்களிடம் மீண்டும் ஆதரவை பெறும்வகையில் மாற்றியவர் அவரது மருமகன் கஷ்னர் என கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து, தற்போது வெள்ளை மாளிகையில் மூத்த ஆலோசகராக கஷ்னரை, ட்ரம்ப் நியமித்துள்ளார்.

உறவினர்களை அரசுப் பதவிகளுக்கு அதிபர் நியமிக்கக்கூடாது என்று 1967ம் ஆண்டு முதல் சட்டம் உள்ளது. ஆனால்,   வெள்ளை மாளிகை ஆலோசகர் பொறுப்புக்கு அந்த சட்டம் தடையில்ல என்று டிரம்ப் கூறி வருகிறார்.

ஜனநாயகக் கட்சியினரோ, மருமகனும் உறவினர் என்று சட்டத்தில் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் அவருடைய தொழில் ரீதியான தொடர்புகளும் இந்த பொறுப்பும், அரசு நலன்களுக்கு முரண்பட்டதாக இருக்கிறது.  கஷ்னரின் நியமனத்தை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று அறிவித்துள்ளனர்.

சமீபத்தில் சீன தொழில் அதிபரை கஷ்னர் சந்தித்த விவாகரத்தையும் அந்த சந்திப்பிற்கு பிறகு நடந்த முக்கிய ரியல் எஸ்டேட் பரிவர்த்தனையும் குறிப்பிடுகிறார்கள்.

இதற்கிடையில்,  தனது நிறுவனத்தில் உள்ள பங்குகளை ட்ரஸ்ட்க்கு மாற்றப்போவதாக கஷ்னர் கூறியுள்ளார். இதன் காரணமாக எந்த தனியார் நிறுவனத்திற்கும் அவருக்கும் நேரடி தொடர்பு இல்லை என்றாகிவிடும்.

மேலும் அரசிடமிருந்து சம்பளம் வாங்காமல் பணியாற்றப் போவதாகவும் கஷ்னர் கூறியுள்ளார்.

கஷ்னரின் மனைவி இவாங்காவுக்கு எந்த அரசுப் பொறுப்பும் வழங்கப்பட வில்லை. இவாங்கா ட்ரம்பின் நிறுவனங்களில் பொறுப்பு ஏற்று நடத்த மாட்டார் என்றும் ட்ரம்ப் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

ட்ரம்பை போல் கஷ்னரும் ரியல் எஸ்டேட் தொழிலில் பிரபலமானவர். கடந்த 2009ம் ஆண்டு ட்ரம்பின் மகள் இவாங்காவை கஷ்னர்  திருமணம் செய்தார். இவர்களுக்கு ஜோசப், தியோடர் என்று இரண்டு மகன்களும் அரபெல்லா என்ற மகளும் உள்ளனர்.

இவர்கள் அனைவரும்  விரைவில் வெள்ளை மாளிகை உள்ள வாஷிங்டன் டிசி பகுதியில் உள்ள வீட்டிற்கு குடிபெயர உள்ளார்கள்.

என்ன தான் டெக்னிக்கலா சட்டப்படி நியமனம் சரி என்று நிருபித்தாலும், மிகவும் முக்கியத்துவம் வெள்ளை மாளிகையில் மூத்த ஆலோசகர் என்றால் குடும்ப ஆட்சி தானே