திமுக ஆட்சியில் இருந்திருந்தால் ஜல்லிக்கட்டு நடந்திருக்கும்!:  ஸ்டாலின் ஆவேசம்

Must read

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க மத்திய,மாநில அரசுகளை வலியுறுத்தி அலங்காநல்லூரில் இன்று திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அலங்காநல்லுரில் பல்லாயிரக்கணக்கில் கூடியிருந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடையே, பேசிய ஸ்டாலின், “ தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்று ஜல்லிக்கட்டு ஆகும்.  உச்ச நீதிமன்ற அறிவுரைகளை அதிமுக ஆட்சி காலத்தில் பின்பற்றாததால்தான் ஜல்லிக்கட்டுக்குக் கொடுத்த அனுமதி ரத்து செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்து விட்டு திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்திருந்தால் ஜல்லிக்கட்டுப் போட்டியை நிச்சயமாக நடத்தியிருப்போம்.

ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று மத்திய அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஜல்லிக்கட்டு வரும் ஆனால் வராது என்ற நிலைதான் தமிழகத்தில் உள்ளது. இதை நகைச்சுவையாக சொல்லவில்லை என்றும் மிகுந்த வேதனையுடன் சொல்கிறேன்..

ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படும் என சட்டப்பேரவையில் ஓபிஎஸ் கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது?” என்று ஸ்டாலின் பேசினார்.

 

 

More articles

Latest article