ஜார்கண்ட் மற்றும் குஜராத் மாநிலத்தில் உள்ள ஜைன வழிபாட்டுத் தலங்களை சுற்றுலா மைய்யமாக்க அம்மாநில அரசுகள் முடிவெடுத்துள்ளன.

இதனை எதிர்த்து நாடு முழுவதும் ஜைன மதத்தினர் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று சென்னையிலும் ஆர்பாட்டம் நடைபெற்றது.

சென்னை சிந்தாதிரிபேட்டையில் துவங்கிய இந்த பேரணியில் ஜைன மதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமன்றி தமிழ் சமணர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
பின்னர் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜைன வழிபாட்டு தலங்களான ஜார்கண்ட் மாநிலத்தின் சிகர்ஜி மலையையும், குஜராத்தில் உள்ள பாலிதானாவையும் சுற்றுலா மையங்களாக மாற்றும் மாநில அரசுகளின் முடிவை கைவிடக் கோரி அம்மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
Patrikai.com official YouTube Channel