சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் நாளை (ஆகஸ்டு 10ந்தேதி) தியேட்டர்களில் வெளியாக உள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை இமயமலை புறப்பட்டு சென்றுள்ளார். ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படம் ரூ.122.50 கோடிக்க விற்பனையாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சன் டிவியின் சினிமா நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெய்லர்’. இதில் ரம்யா கிருஷ்ணன் , தமன்னா, யோகி பாபு, விநாயகன், விடிவி கணேஷ், லெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். அத்துடன் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், கன்னடா சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர்.
ரூ. 200 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருக்கும் இப்படத்தில் மலையாளம், கன்னடம் மொழிகளின் டாப் நடிகர்களும் நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படம் நாளை (ஆகஸ்ட் 10ஆம் தேதி) உலகம் முழுவதும் திரைக்கு வரவிருக்கிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் ஜெயிலர் படம் தற்போருது, தமிழ் சினிமாவில் ஜெயிலர் தான் இப்போது ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.
பட ரிலீஸிற்கு முன்னரே ரஜினியின் ஜெயிலர் வியாபாரம் மற்றும் டிக்கெட் முன்பதிவின் மூலம் பல கோடிகளை வசூலித்துள்ளது. இந்த படம் மாநிலம் வாரியாக விலைபோன விவரம் தெரிய வந்துள்ளது. தமிழ்நாடு– ரூ. 62 கோடி, தெலுங்கு மாநிலங்கள்- ரூ. 13 கோடி, கர்நாடகா- ரூ. 10 கோடி, கேரளா– ரூ. 5.50 கோடி, ROI – ரூ. 3 கோடி, ஓவர்சீஸ் – ரூ. 30 கோடி
மொத்தம் வியாபாரம்– ரூ. 122.50 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் ரஜினிகாந்த் தனது ஒவ்வொரு படத்தின் வெளியீட்டின் போதும் இமயமலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்த நிலையில் கொரோனா காலக்கட்டம் மற்றும் உடல்நிலை காரணமாக நடிகர் ரஜினிகாந்த் கடந்த இரண்டு ஆண்டுகளாக மட்டுமே நீண்ட பயணங்களை தவிர்த்து வந்தார். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை இமயமலை புறப்பட்டு சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இமயமலைக்கு செல்வதாகவும், ஜெய்லர் படம் எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்றும் தெரிவித்தார்.