சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல திரைப்பட இயங்குனர் ர் சித்திக் காலமானார். அவருக்கு வயது 63.
தமிழ் மலையாள திரையுலகில் பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் சித்திக். இவர் பிரபல மலையாளப் பட இயக்குனர் பாசிலிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். ஆரம்ப காலங்களில் மிமிக்ரியில் திறமையானவராக இருந்தார். இதனை அடுத்து 1989 ஆம் ஆண்டு ’ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இந்த படம் தான் தமிழில் ’அரங்கேற்ற வேலை’ என்று ரீமேக் செய்யப்பட்டது என்பதும் இந்த படத்தை ஃபாசில் இயக்கினார். இதைத்தொடர்ந்து ஏராளமான படங்களை இயக்கி உள்ளார்.
இவர் தமிழில் ‘காட்ஃபாதர்’, ‘வியட்நாம் காலனி’, ’ஹிட்லர்’ உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கினார். விஜய், சூர்யா நடிப்பில் வெளியான ‘ஃப்ரெண்ட்ஸ்’ படத்தை இயக்கியிருந்தார். இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற வடிவேலு நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் பிரபலம். பின்னர் தமிழில் பிரசன்னா நடித்த ‘சாது மிரண்டா’, விஜய் நடித்த ‘காவலன்’, அரவிந்த்சாமியின் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ஆகிய படங்களை இயக்கினார்.
இவர் கடந்த சில மாதங்களாக கல்லீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்எபட்ட அவருக்கு அங்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார்.
அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சித்திக் மறைவு திரை உலகிற்கு பெரும் இழப்பு என்று திரையுலகினர் கருத்து தெரிவித்துள்ளனர்