பலவித வாசங்கள் எழுதப்பட்ட டி – ஷர்ட் அணிந்து கெத் ஆக உலா வருவது இளம் வயதினரின் விருப்பம். அந்த வாசகங்களில் முக்கியமானது “ஹீரோ”.
ஆனால், “ஹீரோ” என்ற வாசகம் உள்ள டிஷர்ட் அணிந்தால் சிறைவாசம் உண்டு.
இது.. துருக்கியில்!
இப்படி “ஹீரோ” என்று எழுதப்பட்ட டி-சர்ட்டுகளை அணிந்திருந்த சுமார் 30 பேர் கடந்த பத்து நாட்களில் அங்கு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதை ‘சிஎன்என்துருக்’ செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது.
ஏன் இந்த வித்தியாசமான, விவகாரமான நடவடிக்கை?
கடந்த வருடம், கோக்ஹான் குச்லு என்பவர் தலைமையிலான குழு துருக்கியில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டது. அது தோல்வியில் முடிந்து, குச்லு கைது செய்யப்பட்டார்.
இது குறித்த விசாரணைக்கு வந்த குச்லு, “ஹீரோ” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட டி ஷர்ட்டை அணிந்து சமீபத்தில் நீதிமன்றம் வந்தார்.
அதிலிருந்து, “ஹீரோ” என்ற வார்த்தை அச்சிடப்பட்ட டி ஷர்ட்களை அணிந்தவர்கள் எல்லோரும் குச்லு ஆதரவாளர்கள் என்று ஆளும் வர்க்கமும், பாதுகாப்புப் படைகளும் நினைக்க ஆரம்பித்துவிட்டன.
அதன் எதிரொலிதான் இந்த விபரீத கைதுகள்.
ஆனால் இப்படி கைது செய்யப்பட்டவர்கள் எவரும் குச்லுவுக்கு ஆதரவானவர்கள் என்று நிரூபிக்கப்படவில்லை. தவிர இவர்கள், “ஹீரோ என்று பொறிக்கப்பட்ட டிஷர்ட்களை அணிய தடை என்று அறிவித்திருந்தால் அணிந்திருக்கமாட்டோம். திடீரென கைது செய்கிறார்களே” என்று புலம்புகிறார்கள்.