போபால் சிறையில் கொடூரம்: அதிகாரியை கழுத்தறுத்து கொன்ற சிமி தீவிரவாதிகள்

Must read

போபால்: ஓய்வு பெறும் நிலையில் இருந்த ஒரு தலைமை காவலரை சிமி (இந்தியாவின் மாணவர்களின் இஸ்லாமிய இயக்கம்) இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் சிறையிலேயே வைத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

warder_jail

கொலை செய்யப்பட்ட ராமஷங்கர் யாதவ் கடந்த ஆண்டு தீவிரவாதிகளை அடைத்து வைத்திருந்த செல்லுக்கு வார்டனாக பணியாற்றினார். பல நேரங்களில் அவர் வீட்டுக்கே வர முடியாத அளவுக்கு அவருக்கு கடினமான வேலைப் பளு இருந்திருக்கிறது. இதைப்பற்றி அவர் பலமுறை மேலிடத்தில் புகாரளித்தும் அவருக்கு தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில் அவர் தீபாவளியைக் கூட கொண்டாடாத நிலையில் பணியில் இருந்திருக்கிறார். அவரது குடும்பத்தினர் அவர் வருவார் என்று காத்திருந்திருக்கின்றனர். ஆனால் வந்தது அவரது உயிரற்ற சடலம்தான்.
சிமி இயக்கத்தினர் இரும்பு தட்டை கத்தி போல செய்து யாதவை சிறையில் வைத்தே கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கின்றனர். அவர் கொலை செய்யப்பட்டது “பி” பிளாக் என்ற மிக தனிமையான இடமாகும்.
கொலை செய்யப்பட்ட ராமஷங்கர் யாதவின் மகளின் திருமணம் இன்னும் 5 வாரங்களில் நடக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மகள் சோனியா முற்றிலும் நொறுங்கிப்போய் இருக்கிறார். யாதவுக்கு இரு மகன்கள் இருக்கின்றனர். இருவரும் இந்திய ராணுவத்தில் பணி புரிகின்றனர். தங்கையின் திருமணத்துக்கு லீவு போட வேண்டும் என்பதால் இருவரும் தீபாவளிக்கு விடுப்பு எடுக்காமல் பணியில் இருந்திருக்கின்றனர்.
“தங்கள் தந்தை தனது வாழ்நாளை தனது பணிக்காக அர்பணித்தவர், அவர் இப்படி கொடூரமாக கொல்லப்பட வேண்டியவர் அல்ல, எனவே அவரை தியாகியாக அறிவிக்க வேண்டும்.” என்று அவரது மகன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாதவின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் சொன்ன சிறைத்துறை அமைச்சர், சிறைத்துறையின் மோசமான மேலாண்மைக்காக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் தனது வருத்தத்தை தெரிவித்தார். யாதவின் குடும்பத்தினரில் ஒருவருக்கு அரசு வேலையும் ரூ. 50,000 இழப்பீட்டு தொகையும் வழங்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.

More articles

Latest article