சென்னை: ஜெய்பீம் படம் விவகாரம்: சூர்யா, ஜோதிகா உள்பட படக்குழுவினர் மீது வழக்கு பதிவு செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. வன்னியர் அமைப்பு தொடர்ந்த வழக்கில் காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய்பீம் படத்தில் வன்னியர் சங்கத்தின் அடையாளமான அக்னிசட்டி மற்றும் அந்த படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் இடம்பெற்றது சர்ச்சையானது. இதுதொடர்பான வன்னியர்கள் ஜெய்பீம் படத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். சூர்யா மன்னிப்பு கோர வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் நாயகர், ஜெய்பீம் படத்தில் வன்னியர் அமைப்பினர் அவமதிக்கப்பட்டுள்ளதாக கூறி சூர்யா, ஜோதி மற்றும் படத்தயாரிப்பாளர் மீது வழக்கு தொடர அனுமதி கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு வந்தது. விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், சூர்யா ஜோதிகா மற்றும் ஞானவேல் ராஜா மீது வழக்கு பதிவு செய்யலாம் என சென்னை காவல்துறைக்கு உத்தரவிட்டது.
ஜெய்பீம் படத்தின் தயாரிப்பாளர்கள் சூர்யா-ஜோதிகா மற்றும் இயக்குநர் ஞானவேல்ராஜா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய போலீஸ்க்கு உத்தரவிடப்பட்டுள்ளது