சென்னை:  2023ம் ஆண்டு முதல் சென்னையில் இருந்து ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதி அளிக்கப்படுவதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து உள்ளார்.

தென்மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்ஹஜ்பயணம் மேற்கொள்ளும் நடைமுறை சென்னை விமான நிலையத்திலிருந்து தொடர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கடிதம் மூலம் மத்தியஅரசை வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில்,   2023ம் ஆண்டு முதல் சென்னையில் இருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் நக்வி முதலமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

இதுகுறித்து, மத்தியஅமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், 2023 முதல் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இடமாக சென்னை கருதப்படும் என்ற  உறுதிமொழி அளித்த மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி (Mukhtar Abbas Naqvi) நன்றி. எதிர்காலத்தில் எந்த சூழ்நிலையிலும் சென்னையை ஹஜ் பயணத்திற்கான எம்பார்கேஷன் பாயிண்ட்டாக நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.