சென்னை: சட்டப்பேரவை கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கடல் அரிப்பு மற்றும் கழிவுநீர் குழாய்களை பதிப்பது குறித்த கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்களான  துரைமுருகன், கே.என். நேரு பதில் அளித்தனர்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று  (5-ம் தேதி)  போக்குவரத்து,  சுற்றுலா,  சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. முன்னதாக கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

அப்போது,.கடல்அரிப்பு குறித்து உறுப்பினர் எழுப்பிய கேள்விக்குபேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,  கடல் அரிப்பில் கன்னியாகுமரியை விட தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்டங்கள் மிக ஆபத்தான நிலையில் உள்ளது.கடல் நீர் உட்புகுவதால் குடிநீர் பஞ்சம், விளைநிலங்கள் சேதமடைதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றது என அவர் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, வடசென்னை பகுதி திமுக எம்.எல்.ஏ. ஐட்ரீம் மூர்த்தி வடசென்னை முழுவதும் பழைய கழிவுநீர் குழாய்களை அகற்றி புதிய கழிவுநீர் குழாய்களை பதிக்கப்படுமா, ராயபுரம் தொகுதியில் புதிய கழிவுநீர் குழாய்கள் பாதிக்கப்படுமா?  என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் கூறிய அமைச்சர் கே.என்.நேரு வடசென்னை முழுவதும் பழைய கழிவுநீர் குழாய்களை அகற்றி புதிய கழிவுநீர் குழாய்களை பதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். ரூ.298 கோடி மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.