டெல்லி: இந்தியாவின் 14வது துணை குடியரசு தலைவராக  ஜெகதீப் தன்கர் பொறுப்பேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்தியாவின் புதிய குடியரசு தலைவராக கடந்த மாதம் திரவுபதி முர்மு பதவி ஏற்ற நிலையில், துணைக்குடியரசு தலைவர் தேர்தல் கடந்த வாரம் நடைபெற்றது. முந்தைய துணை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்களின் பதவிக்காலம் ஆகஸ்டு 10ந்தேதியுடன் முடிவடைந்ததால், தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய 14வது  துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் இன்று பதவி ஏற்றார். அவருக்கு குடியரசு தலைவர் முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழா டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகளியில் இ நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில், பிரதமர் மோடி , முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு உட்பட ,  முக்கிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

துணை குடியரசு தலைவரானவர், மாநிலங்களைவை அவை தலைவராகவும் பொறுப்பேற்று, அவையை சுமூகமாக நடத்தவும் செய்ய வேண்டிய பொறுப்பு உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.