11/08/2022: இந்தியாவில் நேற்று 16,299 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதுடன், 19,431பேர் குணமடைந்தனர்..

Must read

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 16,299 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதுடன், 19,431பேர் குணமடைந்தனர். 53 பேர் பலியாகி உள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான 24மணி நேர கொரோனா பாதிப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்ட உள்ளது. அதன்படி,  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,299 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..

தற்போது, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,25,076 ஆக பதிவாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்த பலி எண்ணிக்கை  5,26,879 பேர் ஆக உள்ளது.

இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,35,55,041ஆக பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 2,072,946,593 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் 25,75,389 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

More articles

Latest article