டப்பா

ருங்கினைந்த ஆந்திர மாநிலத்தில் தம்மை முதல்வராக்க காங்கிரசுக்கு ரூ. 1500 கோடி தர ஜகன்மோகன் ரெட்டி தயாராக இருந்ததாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கூறி உள்ளார்.

நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா பிரசாரம் மேற்கொண்டார். அவர் நேற்று ஆந்திர மாநிலத்தில் உள்ள கடப்பாவில் பிரசாரம் செய்தார். கடப்பா ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தலைவர் ஜகன்மோகன் ரெட்டியின் சொந்த ஊர் ஆகும்.

பிரசாரக் கூட்டத்தில், “ஒருங்கிணைந்த ஆந்திராவின் முதல்வரான ஒய் எஸ் ராஜசேகர ரெட்டி மரணம் அடைந்த பிறகு அவர் மகனும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜகன்மோகன் ரெட்டி எனது இல்லத்துக்கு வந்தார். தன்னை முதல்வராக்கினால் காங்கிரசுக்கு ரூ.1500 கோடி அளிக்க தயாராக உள்ளதாக என்னிடம் அவர் கூறினார்.

அவருக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது? அவர் வீட்டில் ஏதும் புதையல் கிடைத்ததா? அத்தனையும் ஊழல் செய்ததில் வந்த பணம் தான். அவர் இப்போது உங்களிடம் வந்து உங்கள் எதிர்காலத்துக்கு உதவுவதாக சொல்வார். ஜாக்கிரதை, அவரப் போன்ற மனிதர்கள் தங்கள் எதிர்காலத்தை மட்டுமே கவனிப்பார்கள். உங்கள் எதிர்காலத்தை இல்லை.

உங்கள் எதிர்காலத்தை அவர்கள் பாழாக்குவார்கள். உங்கள் எதிர்காலம் நன்கு அமைய வேண்டும் என்றால்  உங்கள் வாக்குகளை நீங்கள் தெலுங்கு தேசம் கட்சிக்கு அளித்து சந்திரபாபு நாயுடுவை பதவியில் அமர வைக்க வேண்டும்” என கூறி உள்ளார்.