மெல்போர்ன்: சர்வதேச கிரிக்கெட்டில் ஃபீல்டிங் என்று வரும்போது, இந்தியாவின் ரவீந்திர ஜடேஜாவை மிஞ்சுவதற்கு ஆளில்லை என்று புகழ்ந்துள்ளார் ஆஸ்திரேலிய பேட்டிங் நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித்.

ஒரு நேரலை நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “எனக்குப் பிடித்த விளையாட்டுத் தொடர் ஐபிஎல் தொடர்தான். அதில் விளையாடுவதற்கு நான் எப்போதுமே ஆர்வமாக உள்ளேன்.

இன்றைய நிலையில், யார் சிறந்த ஃபீல்டர் என்று பார்த்தால், அது சர்வதேச அளவில், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜாதான் என்றால் அதில் மிகையில்லை” என்றார்.

ஃபீல்டிங், பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என்று சிறப்பாக செயல்பட்டு, இந்தியாவின் ஒரு நல்ல ஆல்ரவுண்டராக பரிணமித்து வருகிறார் ஜடேஜா. 2019 உலகக்கோப்பை அரையிறுதியில் இவரின் நம்பிக்கையான ஆட்டம், இந்திய அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்றது நமக்கு நினைவிருக்கலாம்.