சென்னை,
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கங்களான ஜாக்டோ, ஜியோ அறிவிப்பின்படி இன்று தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள் செயலின்றி முடங்கின.
ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 6-வது ஊதியக்குழு முடிவுகளை களைந்து, 7-வது ஊதிய குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றி அதன் பயன்களை 1.1.2016 முதல் வழங்க வேண்டும்.
20 சதவீதம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.
கடந்த 5 -ம் தேதி, சென்னை கடற்கரை பகுதியிய்ல நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி குரல் கொடுத்தனர்.
இந்த கோரிக்கைகள் குறித்து தமிழக அரசு எந்தவித அறிவிப்பும் தெரிவிக்கவில்லை என்று கூறி, இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்திருந்தனர்.
அதன் காரணமாக இன்று தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்துள்ளனர். இதன் காரணமாக பள்ளிகள் அனைத்தும் முடங்கி போய் உள்ளது.
பள்ளிகளில் ஒரு ஆசிரியர்கள்கூட இல்லாததால், பள்ளிகளுக்கு குழந்தைகளை கூட்டிவந்த பெற்றோர்கள், தங்களது குழந்தைகளை திருப்பி அழைத்துச்சென்றனர்.
இந்த போராட்டத்துக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தும், அதை மீறி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து, அரசின் எச்சரிக்கையை உதாசினப்படுத்தி உள்ளனர்.
ஏற்கனவே இன்று ஆசிரியர்கள் ஸ்டிரைக் நாளை பள்ளிக்கு வர வேண்டாம் என்று மாணவ மாணவிகளுக்கு அறிவித்துவிட்டால் பெரும்பாலான மாணவ மாணவிகளும் பள்ளிகளுக்கு வருவதை புறக்கணித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளையும், பள்ளி காவலர்கள் திறந்திருந்தும் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் யாரும் வராததால் பள்ளிகள் அனைத்தும் வெறிச்சோடி கிடந்தன.
இந்த போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.