சென்னை:

மிகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள்  இன்று தமிழக ஆளுநரை சந்திக்க உள்ளனர்.

அப்போது அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கோரிக்கை விடுப்பார்கள் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக மீண்டும் குதிரை பேரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுகவின் இபிஎஸ்- ஓபிஎஸ் அணிகள் இணைந்ததைத் தொடர்ந்து, அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட டிடிவி தினகரன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் விரைவில் பொதுக்குழு கூட்டி சசிகலாவையும் நீக்குவோம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டிடிவுி ம்.எல்.ஏ.க்கள் 18 பேர் நேற்று அவருடைய அடையார் இல்லத்தில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். பின்னர் இரவு ஜெயலலிதா சமாதிக்கு வந்து 10 நிமிடம் தியானம் செய்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து இன்று கிண்டி ராஜ்பவன் சென்று கவர்னர் வித்யாசாகர் ராவை சந்திக்க இருக்கினற்னர்.

டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், பழனியப்பன், செந்தில்பாலாஜி, முத்தையா, கோதண்டபாணி, ரெங்கசாமி, வெற்றிவேல், தங்கத்தமிழ்ச்செல்வன், முருகன், மாரியப்பன் கென்னடி, தங்கதுரை, பாலசுப்ரமணியன், ஜெயந்தி, பார்த்திபன், சுப்பிரமணியன், ஜக்கையன், சுந்தர்ராஜ், கதிர்காமு, ஏழுமலை ஆகிய 18 பேரும் இன்று தமிழக (பொறுப்பு) ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்கின்றனர்.

கவர்னர் சந்திக்கும் இவர்கள் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே எடப்பாடி அரசுமீது நம்பிகையில்லா தீர்மானம் கொண்டுவந்தபோது, கூவத்தூர் குதிரை பேரம் நடைபெற்ற நிலையில், தற்போது மீண்டும் தீர்மானம் மீண்டும் கொண்டுவந்தால், தமிழத்தில் மீண்டும் குதிரை பேரம் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.