திமுக மாவட்டச் செயலாளரும், திமுக எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலப் பாதிப்பு காரணமாக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, வென்டிலேட்டர் பொருத்தி, மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்த மருத்துவமனை நிர்வாகம், தற்போது முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜெ.அன்பழகனின் உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ஜெ.அன்பழகன் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறி இருப்பதாக தெரிவித்தார்.