சென்னை:

மிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இன்று காலை 10 மணி நிலவரப்படி, 5,89,794 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர், அபராதம் வசூலிப்பு ரூ.10 கோடியை தாண்டி உள்ளதாகவும் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு ஜூன் 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் செல்வோரை கைது செய்து அபராதம் வசூலித்து வருகின்றனர் போக்குவரத்து காவல்துறையினர்.

அதன்படி,  தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 5,89,794 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 4,50,479 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை, 5,48,842 வழக்குகளும், கடந்த 24 மணி நேரத்தில் 4276 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விதிகறை மீறி இதுவரை ரூ.10.44 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.