பெங்களூர் ஐயங்கார் என்பதை தமிழ்நாடு ஐயங்கார் என மாற்று! நாம் தமிழர் கட்டளை?

Must read

சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பெயரில் வெளியானதாக ஒரு அறிக்கை சமூகவலைதளங்களில் உலாவருகிறது.
14265065_652175174959103_703924248290917899_n
 
அதில், “ தங்கள் கடையின் பெயர் பலகையில்  பெங்களூர் ஐயங்கார் என்று எழுதியிருப்பதை, தமிழ்நாடு ஐயங்கார் என மாற்றிக்கொள்ளுமாறு நாம் தமிழர் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இதை 24 மணி நேரத்தில் மாற்றிக்கொள்ளவும்” என்று அச்சடப்பட்டிருக்கிறது.
“இது உண்மையிலேயே சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சி வெளியிட்ட அறிக்கையா? அப்படி உண்மையாக இருந்தால் தலைமையிடம் அனுமதி வாங்கித்தான் வெளியிட்டார்களா?”   என்று நாம்தமிழர் கட்சி வட்டாரத்தில் விசாரித்தபோது, “அப்படி ஏதும் நாம் தமிழர் கட்சி சார்பாக வேண்டுகோள்  விடுக்கப்படவில்லை. யாரோ சிலர் வேண்டுமென்றே இது போன்ற அறிக்கையை சமூகவலைதளங்களில் உலவவிட்டிருக்கிறார்கள்” என்று கூறினார்கள்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article