ஐயப்பன் பூஜைகள் ஐப்பசி மாதமே ஆரம்பம்!

நேற்று நமது பத்திரிகை.காம் ஐயப்பன் கோவில் நடை திறக்கும் நாட்கள் பற்றிய செய்தி வெளியிட்டிருந்தது.   இந்த வருடத்துக்கான மகர ஜோதி பூஜை திறப்பு அடுத்த மாதம் ஆரம்பிக்க உள்ளது.

இந்நிலையில் வழக்கமாக கார்த்திகை மாதம் ஆரம்பிக்கும் ஐயப்பன் பூஜை இந்த மாதத்தில் இருந்தே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  நமது பத்திரிகை. காமுக்கு கிடைத்த தகவலின் படி சென்னை மாம்பலத்தில் 22.10.2017 அன்று ஒரு ஐயப்ப பூஜை நடைபெற உள்ளது.   அதற்கான பத்திரிகை இந்த செய்தியின் முகப்புப் படமாக வைக்கப்பட்டுள்ளது.

நமது வாசகர்களில் பூஜைக்கு செல்ல விருப்பமுள்ளோர் இந்த பூஜையில் கலந்துக் கொள்ளலாம்.
English Summary
Iyappan pooja started from this month itself