சென்னை: விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு; அரசியல் ரீதியில் அபாயகரமான சூழ்நிலை உருவாகும் என முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான  ஓபிஎஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு சம்பந்தப்பட்ட  221 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துகிறது. திமுக அரசு பதவி ஏற்றதும் முதல் நடவடிக்யைக முன்னாள் அமைச்சர் வீட்டில் ரெய்டு நடத்தியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.  இந்த  ரெய்டு குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இருவரும் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் அவர்கள் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் கூறியதாவது,

“அரசியல் ரீதியாக எதிர்கொண்டு எங்களைச் சந்திக்க முடியாத திமுக, இப்படி அச்சுறுத்தலின் காரணமாக எந்த நிலையிலும் எங்களை எதிர்கொள்ள முடியாது. எவ்வளவு பெரிய அச்சுறுத்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ள அதிமுக தயாராக இருக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை திமுக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். சட்டபூர்வமான நடவடிக்கை எதுவாக இருந்தாலும் அதை அதிமுக சந்திக்கும்.

கடந்த 10 ஆண்டுகாலம் தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளுக்கு ஊறு வந்தபோது அதைக் காப்பாற்ற அதிமுக அரசு சட்டபூர்வமாக நடவடிக்கை எடுத்து எப்படி வெற்றி கண்டது என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். ஒரு அரசியல் இயக்கம், ஆட்சியில் இருந்தபோது தமிழக மக்களின் உரிமைகளையும், தமிழக மக்களின் ஜீவாதார உரிமைகளையும் காத்தது என்பது வரலாறு.  மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை, இடர்ப்பாடுகளைக் களைகின்ற அரசாக அதிமுக அரசு, மக்கள் நல அரசாகச் செயல்பட்டது என்பது அனைவரும் நன்றாக அறிந்ததே.

இன்றைக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு சம்பந்தப்பட்ட இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ரெய்டு மிகவும் கண்டனத்துக்குரியது.‘ எந்த ஒரு புதிய அரசும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கும்போது ஒரு அபாயகரமான சூழ்நிலை அரசியல் ரீதியில் உருவாவதற்கு அடித்தளமாக அமையும் என்பது ஏற்கெனவே தமிழகத்தில் நல்ல பாடமாக அமைந்துள்ளது. ஆகவே, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள திமுக அரசு, காழ்ப்புணர்ச்சி காரணமாக, அரசியல் ரீதியாக, ஜனநாயகக் கடமைகளை முறையாக நிறைவேற்றிய அதிமுக மீது ஜனநாயக விரோத நடவடிக்கைகளைத் தொடுத்துள்ளது கண்டனத்துக்குரியது”. இதுபோன்ற ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கைளை திமுக அரசு நிறுத்த வேண்டும். எவ்வித.

இவ்வாறு அவர் கூறினார்.