திமுக மாவட்டச்செயலாளர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்த திமுக எம்எல்ஏ குக செல்வம், பாஜக தலைவர்களை டெல்லி சென்று சந்தித்து வந்தார். இது சர்ச்சையான நிலையில், அவரிடம் விளக்கம் கேட்டு திமுக நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு செல்வம் அளித்த பதில் திருப்தி தராததால், அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பதவிகளிலும் இருந்தும் நீக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்தது.
இந்த நிலையில், இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
திமுகவில் இருந்து தன்னை நீக்கியது நியாயமல்ல என்று கூறியவர், திமுகவில் இன்னும் சிலர் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர். விரைவில் அவர்களும் வெளியே வருவார்கள் எனக் கூறினார்.
திமுக தலைமை என்மீது சுமத்திய குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இல்லை. எனது கடிதத்திற்கு பதில் கடிதம் கூட திமுக தரவில்லை. திமுகவில் இருந்து நீக்கியது மகிழ்ச்சியளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.