அன்புசெழியன் உள்பட திரைப்பட தயாரிப்பாளர்கள் வீடுகளில் 2வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு…

Must read

சென்னை: வரி முறைகேடு, கருப்பு பணம் புழக்கம் காரணமாக, திரைப்பட தயாரிப்பாளர்களான அன்புசெழியன் உள்பட பல திரையுலகை சேர்ந்தவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் நேற்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று  2வது நாளாக வருமான வரித்துறை சோதனை தொடர்கிறது.

சினிமா பைனான்சியர் அன்பு செழியன் கோபுரம் சினிமாஸ் என்று தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்துள்ளார். அத்துடன் பல்வேறு படங்களுக்கு அவர் பைனான்ஸ் செய்துள்ளார். திரையுலகில் கந்துவட்டி அன்புசெழியன் என்றால் தெரியாதவர் யாரும் கிடையாது. திராவிட கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படுவதால், அவரிடம் யாரும் நெருங்க முடியாத நிலை உள்ளது. இவருக்கு  சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.அவருக்கு சொந்தமான அலுவலகம், வீடு ,உறவினர், நண்பர்கள்  வீடு என பல இடங்களில் சோதனை நடைபெற்றது. மொத்தம் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திய 24 மணி நேரத்தை கடந்து விடிய விடிய வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

அதேபோல் தயாரிப்பாளர்கள் தாணு, நடிகர் சூர்யாவின் பினாமிகளாக கருதப்படும் ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

More articles

Latest article