தூத்துக்குடி:

தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் வருமான வரித்துறையின் சோதனை நடத்தி வருகின்றனர்.


தூத்துக்குடி மக்களவை தேர்தலில் திமுக சார்பில் கனிமொழியும், பாஜக சார்பில் தமிழிசை சவுந்திரராஜனும் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், தூத்துக்குடி குறிஞ்சி நகரில் தங்கியிருக்கும் கனிமொழி வீட்டில் வருமான வரித்துறையின் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து, அவர் வீட்டில் முன்பு திமுகவினர் கூடினர். இது பழிவாங்கும் செயல் என கோஷமிட்டனர்.

இந்த ரெய்டு குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழிசை வீட்டில் கோடி, கோடியாக பணம் வைத்துள்ளனர். அங்கு ஏன் சோதனை நடத்தவில்லை. தேர்தல் ஆணையத்தில் முறையாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை. எதிர்காலத்தில் தேர்தல் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றார்.

இதற்கிடையே, கனிமொழி வீட்டில் ரெய்டு நடத்திய வருமான வரித்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் வெறுங்கையுடன் திரும்பினர்.

தங்களுக்கு வந்தது பொய்யான தகவல் என பின்னர் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரெய்டு குறித்து கனிமொழியின் வீடியோ…