தன்னை தேச விரோதியாக சித்தரித்து தனி நீதிபதி கருத்து கூறியது தவறு! நீதிமன்றத்தில் விஜய்தரப்பு வாதம்…

Must read

சென்னை: தன்னை தேச விரோதியாக சித்தரித்து தனி நீதிபதி கருத்து கூறியது தவறு என்று சொகுசு கார் வரி வழக்கில் நீதிமன்றத்தில் விஜய்தரப்பு வாதம் வைத்துள்ளது.

நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு  இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரை தமிழ்நாட்டில் பதிவு செய்ய, நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது. ஆனால் விஜய் தரப்பில்  வரி கட்டாமல், அரசின் உத்தரவுக்கு தடை  விதிக்க வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையின்போது, வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி,  நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என கடுமையாக விமர்சித்திது இருந்தார். மேலும்  நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து வழக்கை தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து, காருக்கான வரியை கட்டியை நடிகர் விஜய், தனி நீதிபதியின் கருத்தை திரும்ப பெற வேண்டும் என்று மேல்முறையீடு வழக்கு போட்டார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  சொகுசு காருக்கு நுழைவு வரி வழக்கில் தனி நீதிபதியின் கருத்து தன்னை புண்படுத்தியுள்ளது. குற்றவாளி போல காட்டியுள்ளது. உழைப்பில் கிடைத்த பணத்தில் கார் வாங்கிய நிலையில் அதை விமர்சித்து இருப்பது தேவையற்றது.

தன்னை தேச விரோதியாக சித்தரித்து நீதிபதி கருத்து கூறியது து தவறு. தனுஷ், சூர்யா வழக்கிலும் பொதுப்படையாக கருத்து தெரிவிக்கப்பட்டது பொதுப்படையாக நடிகர்களுக்கு எதிராக நீதிமன்றம் தெரிவித்த கருத்து தேவையற்றது, அதை வாபஸ் பெற வேண்டும், என்றும்,  வரி தொடர்பான மற்ற வழக்குகளில் எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில் தனக்கு எதிராக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

நடிகர் விஜய் வழக்கு ஆவணங்களில் தொழிலை குறிப்பிடவில்லை என கூறியிருப்பதாகவும், அதை சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

நடிகர் விஜயின் வெளிநாட்டு கார் மேல்முறையீடு வழக்கு: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்புக்கு உயர்நீதி மன்றம் தடை…

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article