மும்பை:

மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த சில தேர்தல்களில், வாக்களிக்கும் எந்திரத்தில் பா.ஜ.க., முறைகேடு செய்திருப்பது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது.

தேர்தலில் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தாலும் பாஜக கட்சிக்கு ஓட்டு விழும்படி வாக்கு எந்திரத்தில் முறைகேடு செய்யப்பட்டு உள்ளது என்றும்,  குஜராத்  மற்றும் திரிபுரா தேர்தல்களில் பாஜக இப்படித்தான் வெற்றிபெற்றது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்தன.  இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி மஹாராஷ்டிராவில் உள்ள ”சிலா பரிசத்” என்ற தொகுதிக்காக் இடைத்தேர்தல் நடந்தது. இதில் சுயேச்சை வேட்பாளர் ஆஷா அருண் ஷோர் வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டது.  ஆனால் அவருடைய தேங்காய் சின்னத்திற்கு வாக்களித்தால் பாஜக கட்சி வேட்பாளரின் தாமரை சின்னத்திற்கு ஓட்டு விழுந்து இருக்கிறது. தாமரை சின்னத்தில் விளக்கு எரிந்துள்ளது. இந்த நிலையில் அவர் தேர்தல் ஆணையத்தில் இதுகுறித்து புகார் தெரிவித்தார். அவரது புகார் அப்போது எடுத்துக் கொள்ளப்படவில்லை.

ஆனால் அடுத்தடுத்து வரிசையாக இப்படி பிரச்சனை இருக்கிறது என்று தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் மக்கள் புகார் அளித்தார்கள். ஆகவே வாக்களிக்கும் எந்திரத்தில் கோளாறு என்று காரணம் கூறி தேர்தலை நிறுத்தியது தேர்தல் ஆணையம்.

இந்த தேர்தல் ஏன் நிறுத்தப்பட்டது என்று அணில் கல்காளி என்ற சமூக ஆர்வலர் சில நாடுகள் முன்பு தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தேர்தல் ஆணையத்திற்கும், அந்த பகுதி ஆட்சியருக்கும் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு தேர்தல் ஆணையம் அளித்த விளக்கத்தில் ” தேர்தலில் யாருக்கு வாக்களித்தாலும் பாஜக கட்சிக்கு ஓட்டு விழுந்து இருக்கிறது, இதனால்தான் தேர்தல் நிறுத்தப்பட்டது” என்று அதிர்ச்சியூட்டும் தகவலை ஒப்புக்கொண்டுள்ளது.

இதற்கு முன்பு இந்த தகவல் வெளியே கொண்டு வந்த சுயேட்சை வேட்பாளர் அணில் கல்காளி செய்தியாளர்களிடம், ”இந்த முறைகேடு பிப்ரவரி மாதம் நடந்து இருக்கிறது. ஆனால் தேர்தல் ஆணையம் இதை மறைத்துள்ளது. அதோடு அதற்கு நடந்த சில பேட்டிகளில், வாக்களிக்கும் எந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது என்று பொய்யாக தெரிவித்துள்ளது தேர்தல் ஆணையம். இதேபோல் இதற்கு முந்தைய தேர்தலிலும் முறைகேடு நடந்து இருக்கலாம்” என்று அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.