டில்லி:
மத்திய நிதியமைச்சர் சிறுநீரக பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து இன்று டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘சிறுநீரகம் சார்ந்த பிரச்னை மற்றும் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகிறேன். அதனால் தற்போது நான் கட்டுப்பாடுள்ள சுற்றுசூழலில் வீட்டில் இருந்து பணியாற்றுகிறேன்.

எனக்கு எதிர்காலத்தில் அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை முறைகளை, எனக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் முடிவு செய்வார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.