சென்னை:
சாட்டை துரைமுருகனின் பெயிலை ரத்து செய்யுமாறு காவல் துறை தரப்பு தொடுத்துள்ள மனுவில் மதுரை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை சாட்டை துரைமுருகனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
யூ டியூபர் சாட்டை துரைமுருகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு மூன்றாவது முறையாக கைது செய்யப்பட்டார்.
திருச்சியில் இளைஞரை தாக்கிய வழக்கு, மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி, நடிகை குஷ்பு குறித்து அவதூறாக பேசிய வழக்கு என இரண்டு வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு பெயிலில் வந்திருந்த சாட்டை துரைமுருகன் தற்போது இன்னொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், முதல்வருக்கு எதிராக சாட்டை துரைமுருகன் கடந்த சில மாதங்களுக்கு முன் கன்னியாகுமரியில் அவதூறாக பேசினார்
இவர் ஜாமீன் விதிகளை மீறிவிட்டதாக கூறி போலீஸ் மீண்டும் வழக்கு தொடுத்தது. எனவே இவரின் பெயிலை ரத்து செய்ய வேண்டும் என்று போலீஸ் தரப்பு உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாநில முதல்வரை அவதூறாக விமர்சனம் செய்ததில் இவ்வளவு அலட்சியமா என்று போலீஸ் தரப்பிற்க்கும் நீதிபதி குட்டு வைத்து இருந்தார்.
இந்நிலையில், ஜாமீன் கட்டுப்பாடுகளை மீறி ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் 9 பெண் ஊழியர்கள் பேர் பலியானதாக இவர் பொய்யான செய்தியை பரப்பியதற்காக சாட்டை துரைமுருகன் கைதாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.