இரவு நேர ஊரடங்கை அறிவித்துவிட்டு பகலில் அரசியல் பேரணி நடத்துவது கேலிக்கூத்தாக உள்ளது என்று பாஜக எம்.பி. வருண் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வருண் காந்தி, இரவு நேரங்களில் பொதுவாக மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருக்கும்.
அந்த நேரத்தில் ஊரடங்கு எதற்கு ? என்று கேள்வி எழுப்பி உள்ளதோடு.
பகலில் பேரணி, பொதுக்கூட்டம் என்று தங்கள் அதிகார பலத்தை காட்டிக்கொண்டிருக்கிறது பாஜக. மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் பாஜக அரசு பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று வருண் காந்தி காட்டமாக கூறியுள்ளார்.