டெல்லி:

காங்கிரஸ் கட்சிக்கு சேவை செய்தது எனக்கு பெருமை என்று, தனது  ராஜினாமா கடிதத்தை ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து,தோல்விக்கு பொறுப்பேற்று சில மாநில காங்கிரஸ் தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்த நிலையில், தோல்வி குறித்து ஆராய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் கூடியது.

அதில், பேசிய ராகுல்காந்தி மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், அசோக் கெலாட் உள்பட பலரை கடுமையா விமர்சித்த நிலையில், கட்சியின் தலைவர்  பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார். அப்போது. மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

ஆனால், ராகுலின் ராஜினாமாவை ஏற்க மறுத்த மூத்த உறுப்பினர்கள், கட்சியில் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள ராகுல் காந்திக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறை வேற்றி னர். இருப்பினும் ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி பிடிவாதமாக இருந்து வந்தார். சமீபத்தில் காங்கிரஸ் ஆளும் முதல்வர்கள் ராகுலை சந்தித்து அவரை சமாதானப்படுத்த முயன்றனர்.

ஆனால், அவர்  நான் ஏற்கனவே ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டதால் தலைவராக நீண்ட நாட்கள் தொடர முடியாது என்று கூறியுள்ள ராகுல் காந்தி தனது ராஜினாமா கடிதத்தின் நகலை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

அத்துடன், காங்கிரஸ் கட்சிக்கு சேவை செய்தது எனக்கு மரியாதையை கொடுத்தது என்றும், எங்கள் அழகான தேசத்தின் உயிர்நாடியாக, பணியாற்றிய  நாட்டிற்கும் எனது நிறுவனத்திற்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். ஜெய் ஹிந்த் என்று பதிவிட்டு உள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி கடந்த 2007-ம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

ராகுல் ராஜினாமா கடிதம்