
சென்னை
வருமான வரித்துறையினர் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜனின் வீட்டில் குவியல் குவியலாக தங்க நகை சிக்கியது தொடர்பாக, அவரிடம் விசாரணை நடத்தினர்.
காங்கிரஸ் தலைமையில் முன்பு ஆட்சி செலுத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், தமிழகத்தைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜன், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவி வகித்தார். கட்சிக்குள் அவரால், தனியார் சுரங்க ஒதுக்கீட்டில் பிரச்னை ஏற்பட்டதாக புகார் எழுந்தது. அதை தொடர்ந்து, 2013 டிசம்பரில், ஜெயந்தி நடராஜன் பதவி விலகினார். அதன்பின், காங்கிரஸ், கட்சியில் இருந்தே விலகினார்.
சி.பி.ஐ., அதிகாரிகள், 2017 செப்டம்பரில், சென்னை, மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில், சுரங்க ஒதுக்கீடு தொடர்பான வழக்கை ஒட்டி சோதனை நடத்தினர். அப்போது, முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த சமயத்தில் ஜெயந்தி நடராஜன் வீட்டில் இல்லை. அதன் பின், டில்லி, சி.பி.ஐ., அதிகாரிகள், அவரின் வீட்டில், டிச., 12ல், மீண்டும் சோதனை நடத்தினர். அந்த நேரத்தில், வருமான வரித்துறையினரும், சோதனையில் இணைந்தனர்.
தமிழக வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் இது குறித்து கூறியதாவது:
“முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வீட்டில், சோதனை நடத்திய போது, சி.பி.ஐ., அதிகாரிகள், எங்களை அழைத்தனர். நாங்கள் அங்கு சென்ற போது, ஏராளமான தங்க நகைகள் இருந்தன. அது குறித்து அமைச்சர் தரப்பில் விளக்கம் அளிக்கப்படாததால், சி.பி.ஐ., அதிகாரிகள், எங்களுக்கு தகவல் தெரிவித்து எங்களை விசாரிக்க கோரினர்.
முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜினடம் நாங்கள், சிக்கிய தங்க நகைகள் குறித்து, விசாரணை மேற்கொண்டோம். அவர், ”சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனையிட்ட சமயத்தில், வீட்டில் இருந்த அனைத்து முக்கிய ஆவணங்களையும் எடுத்துச் சென்று விட்டனர். என்னால் உடனடியாக என்னால் விளக்கம் தர முடியாது. எனக்கு போதிய கால அவகாசம் தேவை’ என கேட்டுக் கொண்டுள்ளார்ர். நாங்களும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளோம். தற்போது அவரின் விளக்கத்திற்காக நாங்கள் காத்திருக்கிறோம்.” எனக் கூறியுள்ளனர்.
[youtube-feed feed=1]