இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 6 டன் எடையுள்ள 36 செயற்கைகோள்களை ஜிஎஸ்எல்வி வகையைச் சார்ந்த எல்விஎம்-3 எம்-2 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவியது இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ – ISRO).

அதிக எடை கொண்ட இந்த எல்விஎம்-3 எம்-2 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா-வில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது.

நள்ளிரவு 12 மணிக்கு ஏவப்பட்ட இந்த செயற்கைகோள்கள் பூமிக்கு மிக நெருக்கமான சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த இஸ்ரோ தலைவர் சோமநாத் நிலவுக்குச் செல்லும் சந்திராயன்-3 செயற்கைக்கோள் தயாராகி வருவதாகவும் இது அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.