சென்னை:
கடல்சார் ஆராய்ச்சி பணிகளுக்காக ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் ஏவி வருகிறது. தற்போது வரை 7 செயற்கைகோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், ‘‘ஐஆர்என்எஸ்எஸ் வரிசையில் 1ஏ செயற்கைக்கோள் பழுதாகிவிட்டது. இதை சரி செய்ய முடியவில்லை. இதற்கு மாற்றாக கடந்த ஆகஸ்ட்டில் ஏவப்பட்ட ஐஆர்என்எஸ்எஸ் -1எச் செயற்கைக்கோள் திட்டம் தோல்வியில் முடிந்தது. இதைதொடர்ந்து ஐஆர்என்எஸ்எஸ்- 1ஐ செயற்கைக்கோள் நாளை மறுநாள் (12ம் தேதி) ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது.
1.4 டன் எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் திட்டம் வெற்றிகரமாக அமைந்தால் செயலிழந்த ஐஆர்என்எஸ்எஸ் 1ஏ செயற்கைக்கோளுக்கு மாற்றாக அமையும். நிலை, நேரம், வழி ஆகியவற்றை துல்லியமாக அறியமுடியும். இதிலிருந்து பெறும் தகவல்கள், மீனவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்’’ என்றார்
[youtube-feed feed=1]