இஸ்ரோ அபார சாதனை: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Must read

ஸ்ரீஹரி கோட்டா:
ந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து தட்ப வெப்ப நிலையை அறியும் எஸ்.சி. சாட்-1 கோள் உள்ளிட்ட 8 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி அவற்றை 2 சுற்றுப்பாதைகளில் நிறுத்தி சாதனை புரிந்தனர்.
இஸ்ரோ விஞ்ஞானிகளின்  இந்த வெற்றிகரமான சாதனைக்கு, பிரதமர் நரேந்திரமோடி பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
8 செயற்கைகோள்களுடன் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி அவற்றை 2 சுற்றுப்பாதைகளில் நிலை நிறுத்திய இத்தருணம் மிகவும் மகிழ்ச்சிகரமானது. இதனால், இந்தியாவுக்கு பெருமை ஏற்பட்டுள்ளது.
அதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். நமது விண்வெளி வீரர்கள் வரலாற்று சாதனை படைத்துள்ளனர். அவர்களது புதிய கண்டுபிடிப்பின் ஆர்வம் 125 கோடி இந்தியர்களின் மனங்களை தொட்டுவிட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய ராக்கெட் வரலாற்றிலும், இஸ்ரோ வரலாற்றிலும்  முதன்முறையாக ஒரே பயணத்தில் இருவேறு சுற்றுவட்டப்பாதைகளில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றி பெற்று உள்ளனர். இந்திய ராக்கெட் பயணத்திலேயே மிக நீண்டதாக கருதப்படும் இந்த நிகழ்வு இஸ்ரோ வரலாற்றில் மற்றொரு மைல்கல்/
பிஎஸ்எல்வி – சி35 ராக்கெட்டில், இந்திய பருவ நிலை ஆய்வுக்கான ‘ஸ்கேட்சாட் -1’ என்ற 370 கிலோ கொண்ட பிரதான செயற்கைக்கோள் இடம்பெற்று இருக்கிறது. ஏற்கனவே வானிலை ஆய்வுக்கு பல செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டு இருந்தாலும், வானிலை அறிவிப்புகளை முன்கூட்டியே, துல்லியமாக கணிக்க இது ஏதுவாக இருக்கும் என்கின்றனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்.
புயல் வருவதை முன்கூட்டியே துல்லியமாக கணக்கிட உதவும் ஸ்காட்சாட் 1 செயற்கைகோள் உள்பட 8 செயற்கைகோள்களுடன் இன்று காலை 9.12 மணிக்கு விண்ணில்  பாய்ந்தது பிஎஸ்எல்வி சி35.
இன்று விண்ணில் நிலை நிறுத்தப்பட உள்ள 8 செயற்கைகோள்களில் மூன்று இந்தியாவைச் சேர்ந்தவை.
5 செயற்கைகோள்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article