இஸ்ரேல்
இஸ்ரேல் அரசு வெளிநாட்டுப்பயணிகளுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது.
உருமாறிய கொரொனா வைரஸ் ஆன ஒமிக்ரான் உலக நாடுகளில் வேகமாக பரவியதால் பல நாடுகளில் வெளிநாட்டுப் பயணிகளுக்குத் தாடை விதிக்கப்பட்டது. அவற்றில் இஸ்ரேல் நாடும் ஒன்றாகும். பரவலைக் கட்டுப்படுத்த இஸ்ரேல் அரசு கடந்த நவம்பர் மாதம் வெளிநாட்டுப் பயணிகளுக்குப் பல தடைகள் விதித்தது.
இஸ்ரேல் அரசு அந்நாட்டுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு இரு வாரத் தடை விதித்தது. தவிர அவசர காரணங்களுக்கு மட்டும் அனுமதி அளித்த அரசு அவ்வாறு வருவோருக்குக் கட்டாய தனிமைப் படுத்தலை அறிவித்தது. நேற்று இதூ குறித்து இஸ்ரேல் அமைச்சரவை கூட்டம் நடந்துள்ளது.
அப்போது இஸ்ரேலில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. விவாத முடிவில் இஸ்ரேல் அரசு விமானங்கள் இயக்க விதிக்கப்பட்ட தடைகளை நீக்கி கட்டாய தனிமை கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவித்துள்ளது
அதன்படி ஆப்ரிக்க நாடுகள், ஐரோப்பாவில் உள்ள ஜெர்மனி, டென்மார்க், இத்தாலி, ஸ்வீடன், பெல்ஜியம், பின்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.