சிரிய தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள ராணுவ தளங்களை குறிவைத்து சனிக்கிழமை அதிகாலை இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது, இது சிரியாவுக்கு எதிரான இஸ்ரேலிய தாக்குதல்களில் சமீபத்திய நிகழ்வு என்று தேசிய சிரிய தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

நள்ளிரவுக்குப் பிறகு டமாஸ்கஸில் வெடிகுண்டு சத்தம் கேட்டதாகவும் அது எதிரிகளின் ஏவுகணை தாக்குதல் போல் இருந்ததாகவும் கூறியது.

டமாஸ்கஸ் அருகே இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் என்று அரசுக்குச் சொந்தமான தொலைக்காட்சி பின்னர் உறுதி செய்தது.

இதற்கிடையில், சிரிய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:35 மணியளவில், “இஸ்ரேலிய எதிரி” ஆக்கிரமிக்கப்பட்ட சிரிய கோலன் குன்றுகளின் திசையில் இருந்து டமாஸ்கஸ் அருகே உள்ள சில இராணுவ புள்ளிகளை குறிவைத்து வான்வழித் தாக்குதலை நடத்தியது என்று கூறியுள்ளது.

பெரும்பாலான ஏவுகணைகளை வான் பாதுகாப்பு அமைப்பினர் வீழ்த்தியதை அடுத்து உயிரிழப்பு மற்றும் பொருள் சேதம் தவிர்க்கப்பட்டதாக அது மேலும் கூறியது.

சமீபத்திய ஆண்டுகளில், சிரியாவில் ஈரானுடன் தொடர்புடைய இலக்குகள் மற்றும் லெபனான் போராளிகளான ஹெஸ்பொல்லாவுக்கு ஆயுதங்களைக் கொண்டு செல்லும் ஈரானின் கான்வாய்கள் ஆகியவற்றைக் குறிவைத்து நூற்றுக்கணக்கான வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியதியுள்ளது.

இஸ்ரேல் ஈரானை தனது பரம எதிரியாக பார்க்கிறது மற்றும் சிரியாவில் நிரந்தர தளத்தை நிறுவும் ஈரானின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டுவருகிறது.

சிரியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே உள்ள கோலன் குன்றுகளை
1967 மத்திய கிழக்குப் போரின் போது சிரியாவிடமிருந்து கைப்பற்றிய இஸ்ரேல் 1981 இல் இணைத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.