ஜெருசலேம்

ஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் இந்தியாவுக்கு வருகை தர உள்ளதாக அந்நாட்டுத் தூதர் அறிவித்துள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளாக இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகளிடையே நட்புறவு நிலவி வருகிறது.   இதற்கான சிறப்பு அடையாள் லட்சினை அமைக்கக் கடந்த ஆண்டு ஒரு போட்டி அறிவிக்கப்பட்டது.  இந்த போட்டியில் கலந்து கொண்ட இந்தியாவின் வாரணாசியை சேர்ந்த கல்லூரி மாணவர் நிகில் குமார் ராயின் அமைப்பு ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டது.

 ஜெருசலேம் நகரில் உள்ள இந்தியர்களுக்கான தூதரக அதிகாரி நாயோர் சிலான் மற்றும் டெல் அவிவ் இந்தியத் தூதரக அதிகாரி சஞ்சீவ் சிங்லா ஆகியோர் இந்த வடிவமைப்பை அறிமுகம் செய்தனர்.   அப்போது சிலான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அந்த பேட்டியில் அவர்,

“கடந்த 30 ஆண்டுகளாக இந்தியா, இஸ்ரேல் நாடுகள் பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு நல்கி வருகின்றன.  இந்த இரு நாடுகளின் 30 ஆண்டுக் கால நட்புறவை எடுத்துரைக்கும் வகையில், சிறப்பு அடையாள லட்சினையில் இந்தியா, இஸ்ரேல் நாடுகளின் தேசியக் கொடியில் உள்ள டேவிட், அசோக சக்கரம் இடம் பெற்றுள்ளன.

இவ்விரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் இஸ்ரேல் பிரதமர் பென்னட் இந்த ஆண்டு இந்தியா வருகை தர உள்ளார். கடந்த ஆண்டு, இங்கு வந்த ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் அழைப்பை ஏற்று பென்னட் இந்தியா வர இருக்கிறார்”

னத் தெரிவித்துள்ளார்.