ரியாத்

ஸ்ரேல் மக்களுக்கு அவர்கள் நாட்டில் அமைதியுடன் வாழ முழு உரிமை உள்ளதாக சௌதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பொறுப்பேற்ற பின் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.  தற்போது பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமம் பெண்களுக்கு சௌதியில் வழங்கப்பட்டுள்ளது.   ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கு ஊதியம் வழங்கப்படும் எனவும் பெண்கள் விளையாட்டுப்  போட்டிகள் உள்ளிட்ட பல நிகழ்வுகளில் பங்கெடுக்கலாம் எனவும் இளவரசர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ”இஸ்ரேலிய மக்களான யூதர்களுக்கு அவர்களுடைய நாட்டில் அமையுடன் வாழ உரிமை உள்ளது.    பாலஸ்தீனியர்களுக்கு இஸ்ரேலியர்களுக்கும் நாட்டில் முழு உரிமை உள்ளது.   அமைதியை நிலைநாட்டும் வகையில் இரு தரப்பினரும் ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்”  என தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் சௌதி அரேபியா விமான நிறுவனம் தனது விமான சேவையை இஸ்ரேலுக்கு  தொடங்கியது குறிப்பிடத்தக்கது.