இஸ்ரேல் மலருக்கு ‘மோடி’ என பெயர் சூட்டி கவுரவம்!

ஸ்ரேல் நாடு அந்நாட்டை சேர்ந்த மலருக்கு ‘மோடி’  என்று இந்திய பிரதமர் பெயர் சூட்டி கவுரவித்து உளளது.

இஸ்ரேல் நாட்டுக்கு 3 நாள் பயணமாக சென்றுள்ள மோடிக்கு இஸ்ரே நாடு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தது.

இந்நிலையில், இந்தியப் பிரதமரான மோடியை கவுரவிக்கும் வகையில், இஸ்ரேலை சேர்ந்த ‘க்ரைசாந்துமுன்’ என்ற மலருக்கு ‘மோடி’ என்று பெயர்ச சூட்டப்பட்டது.

இஸ்ரேல் சென்றுள்ள முதல் இந்தியப் பிரதமரான மோடிக்கு, டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமான நிலையத்தில் மோடியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு வரவேற்றார். தொடர்ந்து, பிரதமர் மோடி ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து, இஸ்ரேலில் உள்ள டென்சிகர் மலர் பண்ணையைப் பார்வையிட்டார் மோடி.

பிரதமர் மோடிக்கு மரியாதை செய்யும் விதமாக, இஸ்ரேலிய க்ரைசாந்துமன் என்ற மலருக்கு ‘மோடி’ என்று பெயர்சூட்டப்பட்டது.

“இஸ்ரேலிய க்ரைசாந்துமன் என்ற மலர், வேகமாக வளரக்கூடிய ரகத்தைச் சேர்ந்தது. இந்தியப் பிரதமரை கெளரவிக்கும் விதமாக, இந்த மலருக்கு ‘மோடி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது” என வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளரான கோபால் பாக்லே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து குண்டு துளைக்காத அறையில் தங்கியுள்ள மோடி, இன்று மாலை இஸ்ரேலில் வசித்து வரும் இந்திய வம்சாவளியினரை சந்தித்து பேசுகிறார்.


English Summary
Israel names new flower in honor of visiting Indian prime minister