புதுடில்லி:
ணையதளத்தில், கடந்த வாரம், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு வெளியிட்ட வீடியோவில், தமிழகத்தை சேர்ந்த இருவர் உட்பட, 11 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, மூத்த அரசு அதிகாரி கூறியதாவது: கடந்த வாரம், ‘தி லேண்ட் ஆப் ஹிந்த்: பிட்வீன் பெய்ன் அண்ட் ஹோப்’ என்ற பெயரில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் பிரச்சார வீடியோ, இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
22 நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவில், தமிழகத்தை சேர்ந்த இரண்டு பேர் உட்பட, 11 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்திருக்கிறது.
a
தமிழகத்தில், கடலுார் மாவட்டத்தை சேர்ந்த, ஹாஜா பக்ருதீன் உஸ்மான் அலி, ஐ.எஸ்., வீடியோவில் இடம்பெற்றுள்ளார். . இவர் தனது  குடும்பத்தினருடன், ஆறு ஆண்டுக்கு முன், சிங்கப்பூரில் குடியேறினார். 2013ம் ஆண்டு, நவம்பர் மாதம் , மனைவி, மூன்று குழந்தைகளுடன், ஹாஜா பக்ருதீன், சிரியாவுக்கு சென்று, அங்கு நடக்கும் போரில் பங்கேற்க முயன்றுள்ளார்.  ஆனால், ஐ.எஸ்., இயக்கத்தினருடன், அவரால்  தொடர்பு கொள்ள முடியாததால், மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி வந்துள்ளார்.
பிறகு 2014, ஜனவரியில், ஹாஜா பக்ருதீன், சென்னையிலிருந்து, சிரியா சென்றுள்ளார். அப்போது முதல், ஐ.எஸ்., இயக்கத்தில், அவன் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
அதேபோல கடலுார் மாவட்டத்தை சேர்ந்த குல் முகம்மது மரைக்காயர் என்பவர், சிங்கப்பூரில் இருந்துகொண்டு ஐ.எஸ்., இயக்கத்துக்கு ஆட்களை சேர்க்கும் பணியை செய்து வந்தார். 2014ல், இவரை, சிங்கப்பூர் அரசு நாடு கடத்தியது.  2015க்கு பின், குல் முகம்மது பற்றிய தகவல் ஏதும் தெரியவில்லை. தற்போது, ஐ.எஸ்., வெளியிட்ட வீடியோவில் அவர்  இடம்பெற்றுள்ளார்.
கடந்த வாரம் வெளியான வீடியோ, 10 மாதங்களுக்கு முன் தயாரிக்கப்பட்டதாக கருதப்படுகிறது. இதில், அடையாளம் காணப்பட்டுள்ள இந்திய பயங்கரவாதிகளில் ஒருவரான  சாஜித், 2015, செப்டம்பரில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்” – என்று  அந்த அரசு அதிகாரி தெரிவித்தார்.