குஜராத்: ஆர்.எஸ்.எஸ்-ல் இணைந்தார் வஞ்ஜாரா ஐ.பி.எஸ்.

Must read

Vaishnavi Rajmohan
Vaishnavi Rajmohan is a biotechnologist by profession and a rationalist by practice. Her writing interests include literature, social and scientific articles.

நீதிமன்றம், இஷ்ரத் ஜஹான் மற்றும் சோராபுதின் ஷேக் என்கவுண்டர் வழக்குகளில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி DG வஞ்ஜாரா அவர்களின் ஜாமீன் நிபந்தனைகளைத் தளர்த்தி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அவர் , பொது வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பதாக அறிவித்தார்.
இதனையடுத்து வஞ்ஜாரா, வெள்ளிக்கிழமையன்று குஜராத் திரும்பினார். இரண்டு நாட்களுக்குப் பின்னர், ஞாயிறன்று அஹமதாபாத்தில் ஆர்எஸ்எஸ் ஏற்பாடு செய்திருந்த வர்ஷா ப்ரதிபா எனும் இந்து மதப் புத்தாண்டு கொண்டாட்டத்தில்  கலந்துக் கொண்டார்.
Vanzara ips vanzara ishrat-1
இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் பல மூத்த அரசாங்க அதிகாரிகள் பாஜக தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் கலந்துக் கொண்டனர்..
பாஜக மூத்த தலைவர் ஐ.கே. ஜடேஜா, கல்வி அமைச்சர் பூபேந்திர-மான்சிங் சுதாசமா, அசர்வா தொகுதி  எம்.எல்.ஏ. ஆர். படேல், எம்.பி. ஜெய்ஸ்ரீ பென் பட்டேல், அகமதாபாத் மேயர் கவுதம் ஷா மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.
vanzara700
கூட்டத்தில் பேசிய பகவத் கூறினார்: “இந்தியாவில், ஆர்.எஸ்.எஸ்-ன் தாக்கம் காலப்போக்கில் வளர்ந்து வருகிறது, நம் மீது மக்களின் நம்பிக்கை தீவிரமாகி வருகிறது.”
ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் எதிர்ப்பவர்கள் குறித்து பேசுகையில் “அவர்கள் ஆர்.எஸ்.எஸ்.என்றாலே உடல் நடுங்குகிறார்கள்.  குறுகிய மனப்பான்மை உடையவர்கள்” என்றார்.
“எங்களைப் பொறுத்தவரை, ‘பாரத் மாதா கி ஜே’ அவர்கள் நம்பிக்கை போதுமான ஒரு நல்ல, வலுவான மற்றும் உண்மையான ஹிந்து அவன் குணத்தினால் அறியப்படுவான், அவன் செய்யும் சடங்குகளால் அல்ல” என்றார்.
vanzara-bail
முழு உலகமே இந்தியாவைப் பார்த்து வியந்து ‘பாரத் மாதா கி ஜே’ என உச்சரிக்கும்படி செய்யுமளவிற்கு இந்தியாவின் முன்னேற்றத்திற்கு உழைக்க  ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்க அவர் அழைப்பு விடுத்தார்.
ஜாமின் மறுக்கப் பட்டு பிறகு  குஜராத்திற்குள் நுழையக் கூடாது என இருந்த கட்டுப்பாட்டை தளர்த்திய பின், முதல் பொது நிகழ்ச்சியாக அவர் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article