முத்தலாக் தடை கோரி மனு அளித்த இஷ்ரத் ஜகான் மோடிக்கு ராக்கி அணிவித்தார்

Must read

டில்லி

நேற்று ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு முத்தலாக் தடை கோரி மனு அளித்த இஷ்ரத் ஜகான் நேற்று பிரதமர் மோடிக்கு ராக்கி அணிவித்தார்.


இஸ்லாமியப் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்டத்தின் மூலம் உடனடி முத்தலாக் தடை செய்யப்பட்டுள்ளது.  இந்த  சட்டம் ஆகஸ்ட் 1 முதல் அமுலுக்கு வந்துள்ளது.  இதன் மூலம் உடனடி முத்தலாக் சொல்லும் இஸ்லாமிய ஆண்களுக்கு மூன்று வருடம் வரை சிறைத் தண்டனை வழங்க வாய்ப்பு உள்ளது.  இந்த  மசோதாவுக்கு ஜூலை 30 அன்று நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த சட்டத்தைக் கோரி மனு அளித்தவர்களில் முதன்மையானவர் இஷ்ரத் ஜகான் என்னும் இஸ்லாமியப் பெண் ஆவார்.  இவருடைய கணவர் துபாயில் வசித்து வந்தார்.  அவர் ஜகானுக்கு தொலைபேசி மூலம் ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்தார்.  அதை ஒட்டி இந்த முறையை எதிர்த்து இஷ்ரத் ஜகான் மனு அளித்தார்.  தற்போது அது சட்டமாக்கப்பட்டுள்ளது.

நேற்று ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு பிரதமர் மோடியின் கையில்  இஷ்ரத ஜகான்  ராக்கி அணிவித்து ஆசி பெற்றார்.    அத்துடன் பாகிஸ்தானைச் சேர்ந்த குமர் மோசின் ஷேக் என்னும் பெண்ணும் பிரதம்ர் கையில் ராக்கியை அணிவித்து அவருடைய நல்ல உடல் நலத்துக்காக பிரார்த்தனை செய்துக் கொண்டார்.

More articles

Latest article