சென்னை:
ஷா யோகா மையத்தில் கிட்னி திருடுகிறார்கள் என்று இளம்பெண்ணின் தாயார் கோவை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து உள்ளார்.
essa-2
ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்தில் போதைப் பொருள், வசிய மருந்து பயன்படுத்தி 5,000 குழந்தைகளை கோமா நிலைக்கு தள்ளி கிட்னி திருடப் போகிறார்கள் என்று அந்த மையத்தில் சிக்கிய இளம்பெண்களின் தாய் சத்யஜோதி திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
ஈஷா யோகா மையம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பபட்டு வருகிறது. ஏற்கனவே மரங்களை வெட்டி, காடுகளை அழித்து கட்டிடங்கள் கட்டுவதாக சமுக ஆர்வலர்களால் பிரச்சினை ஏற்பட்டது.
அதன்பின்னனர், யோகா மையத்திலுள்ள சந்திர மண்டலம், சூரிய மண்டலம் என்ற குளிக்கும் பிரமாண்ட தொட்டியில் பாதரசம் கலந்துள்ளது என்றும், இதில் நீராடுவதால் மனம் பேதலித்து, ஈஷா மையத்திலேயே தங்கி விடுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
eesa-1
கடந்த 2015ம் ஆண்டு இந்திய வம்சாவளியை சேர்ந்த, ஸ்வீடன், பாகர்மூசன் ஸ்டாக்ஹோமைச் சேர்ந்த ஜெயா பாலு, என்பவர், லிங்க பைரவ சிலை வாங்க பணம், கொடுத்ததாகவும், அவர்கள் உடைந்த சிலையை கொடுத்து ஏமாற்றி விட்டதாகவும், புதுடெல்லியில் உள்ள ஸ்வீடன் தூதரகத்தில் பண மோசடி தொடர்பாக புகார் தெரிவித்துள்ளார்.
கோவையை சேர்ந்தவர் காமராஜ். பேராசிரியர். இவரது மனைவி சத்யஜோதி. இவருக்கு 2 மகள்கள். இருவரும் பொறியியல் பட்டதாரிகள். இருவரும் ஈஷா யோகா மையத்தில் அடிமையாக இருக்கிறார்கள், அவர்களை மீட்டுத் தாருங்கள் என கோவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்துள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: என் மகள்களைப் பார்க்க வாரம் ஒருமுறை ஈஷா யோகா மையத்துக்குப் போய்க் கொண்டிருந்தேன். ஆனால் எங்களை பார்க்க எனது இளைய மகள் வருவதில்லை. அவளுக்கு மொட்டையடித்து உள்ளார்கள். மொட்டையடித்தால், பெற்றோர் கல்யாணம் செய்ய வற்புறுத்த மாட்டார்கள், இங்கேயே இருக்கலாம் என அவளை ஏமாற்றி மொட்டை அடித்து உள்ளார்கள்.
eesa-2
எனது மகள் 40 பவுன் நகையுடன் ஈஷா யோகா மையம் வந்தாள். அந்த நகையை ஈஷா யோகா மையத்தினர் பிடுங்கி கொண்டார்கள். அவர்களுக்கென தனி வசிய உணவுகள் கொடுத்து அவர்களை சாமியாரினி ஆக்கி உள்ளார்கள். காலை உணவு 7 மணிக்குள்ளும், இரவு உணவு மாலை 7 மணிக்குள் உண்ணச் சொல்லி நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
அவர்களை இருவரையும் மூளைச்சலவை செய்து, அம்மா, அப்பாவிடம் கை சோறு  இனி சாப்பிடப் போவதில்லை என்றும்,  ஈஷா யோகா மையத்திலேயே செத்துவிட்டால் மோட்சம் கிடைக்கும் என சொல்லி அவர்கள் மனதை மாற்றி யிருக்கிறார்கள். அவர்களும் அதைத்தான்  நம்புகிறாள்… எங்களிடம் வந்தால் நரகமாம்.
மேலும், ஈஷா என்கிற யோகா மையமே இருக்கக் கூடாது என்று ஆவேசமாக கூறினார்.
Dhyanalinga_Sarva_Dharma_Sthamba
ஈஷா யோகா மையம் குழந்தைகள் காப்பகம் ஒன்றை நடத்தி வருகிறது. அங்க ஐந்தாயிரம் குழந்தைகள் உள்ளளனர். அந்த குழந்தைகளின் உயிரை காப்பாற்றியாக வேண்டும் என்றும் கூறினார்.
என்  இரண்டு பிள்ளைகளைவிட 5,000 குழந்தைகள் உயிர்தான் முக்கியம். இல்லையெனில் 5,000 குழந்தைகளுமே நடைபிணமாக மாறி கோமாவுக்கு சென்றுவிடும் என்றும், கோமா நிலைக்கு போனவர்களின்  கிட்னிகளைத் திருடி விற்கிறார்கள் என்றும் அதிர்ச்சியான குற்றச்சாட்டுகளை கூறினார்.
ஈஷா யோகா மையத்தில் கிட்னி திருடி விற்பனை செய்வது சர்வ சாதாரணமாக நடைபெற்று வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
ஈஷா யோகா மையத்தில் பயன்படுத்தப்படும் ஊதுபத்தியில் போதைப் பொருள் கலந்திருக்கிறது என்றும் அந்த வாசனையை நுகர்ந்தால் நாம் ஒருவித மயக்க நிலைக்கு செல்ல நேரிடும் என்றும்,  தலையில் தேய்க்கும் எண்ணெய் உட்பட அவர்கள் தரும் பொருட்களைத்தான் அங்கு தங்கி உள்ளவர்கள் பயன்படுத்த வேண்டும்  என்று கட்டாயப்படுத்தப்படுகிகர்கள். இதன்மூலம் அவர்களை வசியப்படுத்தி, அடிமைகளாக மாற்றிவிடுகிறார்கள் என்றார்.
சிவராத்திரி அன்று அங்குள்ளவர்களை காடுகளில் சுமார் 30 கி.மீ தூரம் சென்றுவர அறிவுறுத்தப்படுகிறார்கள். அப்போது அவர்களுக்கு ஊக்க மருந்து தருகிறார்கள். அதன் காரணமாக அவர்கள் ஒருவித மயக்கத்திலேயே, நடைபிணமாக நடக்கிறார்கள்.
என் மகள்கள் இருவரையும், எங்களுடன் அனுப்ப கோரினோம். ஆனால் அவர்களை வெளியே விட மறுத்துவிட்டார்கள். அவர்கள் வெளியே வந்துவிட்டால் ஈஷா யோகா மையம் தொடர்பான அனைத்து உண்மைகளும் பொதுமக்களுக்கு தெரிந்துவிடும் என்பதால் அவர்களை விட மறுக்கிறது ஈஷா யோகா மையம் என்றும் பரபரப்பு குற்றம் சாட்டினார்.
ஈஷாயோகா மையமும், சர்ச்சைகளும் விட்டபாடில்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இப்படி பல்வேறு பிரச்சினைகள்  ஈஷா யோக மையம் மீது வந்தாலும், எதற்கும் அசைந்து கொடுக்காமல்  ஜக்கி….  தனது ஆன்மிக  பணியை தொடர்ந்து கொண்டிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது.