ஈஷா  மஹாசிவராத்திரி  விழா :2018

Must read

 

24 வது ஈஷா மஹாசிவராத்திரி   விழா பிப்ரவரி 13ம் தேதி 112 அடி ஆதியோகி முன்பு சத்குரு அவர்களின் முன்னிலையில்  கோலாகலமாக நடைபெற்றது.

தமிழக ஆளுநர் திரு பன்வாரிலால் ப்ரோஹித் அவர்கள், புதுச்சேரி முதல்வர் திரு V. நாராயணசாமி அவர்கள் ,  துணை  முதல்வர் திரு O. பன்னீர் செல்வம் அவர்கள், ஊரக வளர்ச்சித்  துறை  அமைச்சர் திரு S. P. வேலுமணி அவர்கள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் திரு ‘சொல்லேருழவன்’ செல்லமுத்து அவர்கள் ,  நடிகை தமன்னா பாட்டியா உள்ளிட்ட பல பிரபலங்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

விழாவில் தமிழகத்தி இருந்து மட்டுமன்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து கலந்து கொண்டனர்

நிகழ்ச்சியின் துவக்கத்தில்  லிங்க பைரவி தேவியின் உற்சவ மூர்த்தி பிரமாண்ட ஊர்வலமாய் ஆதியோகி திருவுருவச்சிலை முன்பு வந்தடைதது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

 

உலக மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியம், நல்  வாழ்வு வழங்கவல்ல யோகக் கலையை உலக மக்கள் அனைவருக்கும் எடுத்து செல்வதை குறிக்கும் விதமாக சத்குரு அவர்கள் மஹா யோக யக்ஞாவை யோகேஸ்வர லிங்கம் முன்பு  ஏற்றி வைத்து நிகழ்ச்சியை துவக்கி  வைத்தார்.

இரவு முழுவதும் அனைவரும் விழித்திருக்கும் வண்ணம்  துள்ளலான இசை நிகழ்ச்சிகளில் வழங்குவது  ஈஷா மஹாசிவராத்திரியின் தனிச்சிறப்பாகும்.  இவ்வருடம் புகழ்பெற்ற பாடகர் திரு சோனு நிகாம், மற்றும் தலெர் மெஹந்தி, திரு மோஹித் சவுஹான் மற்றும் சியன் ரொனால்டோ ஆகியோரின்  இசை நிகழ்ச்சிகள் மக்களை முழு இரவும் விழிப்பாக உற்சாகமாக வைத்திருந்தது.

மேலும் சந்தோஷ் ஷெட்டி குழுவினர் மற்றும் மணிப்பூர் ட்ரம்மர்ஸ் வழங்கும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது .  மற்றும் சௌண்ட்ஸ் ஆப் ஈஷா (Sounds of Isha ) இசை குழுவினரின் உற்சாகமான இசை தொகுப்புகளும் அரங்கேறியது. மற்றும் 117 தன்னார்வலர்கள் ஆதியோகிக்கு அர்பணிக்கவிருக்கும்  மகா ஆரத்தி அர்ப்பணிப்பு நடனமும் நடைபெற்றது.

முக்கியமாக சத்குரு அவர்களின் சொற்பொழிவுகளும், மஹாமந்திர  உச்சாடனையும், நள்ளிரவு தியானமும் பார்வையாளர்களை விழிப்புடனும், உற்சாகத்துடனும், த்யான நிலை உணரவும் வழிவகுத்தது.

சத்குரு அவர்கள் பேசுகையில், “ஒவ்வொரு மதமும் 14 வது நாள் சிவராத்திரி  ஆகும்.   மாசி மாதம் வரக்கூடிய சிவராத்திரி  மஹாசிவராத்திரி ஆகும்.     இந்நாளில் முதுதண்டை நேராக வைத்திருக்கும் போது   இயற்கையாகவே  சக்திநிலை மேல்நோக்கமாக  நகர்கிறது.

ஆன்மிக சாதனையில் இருப்பவர்களுக்கு இந்நாளில் மேற்கொள்ளும் பல சிறப்பு  பயிற்சிகள் உள்ளன.  எவ்வித ஆன்மிக சாதனையும்   இல்லாதவர்களுக்கு எளிமையான  சாதனாவாக  முதுதண்டு நேராக வைத்திருப்பது பலனளிக்கும்.

அட்ச ரேகையிலிருந்து  11 டிகிரியில் இருக்கும் இடங்கள் இயல்பாகவே சக்தி மிக்கவையாக இருக்கிறது. நம் நாட்டில் நிறைய ஆலயங்கள் அட்ச ரேகை 11 டிக்ரீயில்  அமைந்துள்ளது.  இப்போது நாம் இருக்கும் இந்த ஆதியோகி வளாகம் மிக துள்ளியமாக   அட்ச ரேகையிலிருந்து  11 டிகிரியில் அமைந்துள்ளது இதன் சிறப்பம்சம்.

கிரஹஸ்தர்கள் இந்நாளை  சிவா பார்வதியின் திருமண நாளாக கொண்டாடுகின்றனர். சிலர் சிவன் தனது எதிரிகளை வெற்றி கொண்ட நாளாக கொண்டாடுகின்றனர். யோகிகள் இந்நாளை  சிவன் கைலாய மாலையுடன் ஒன்றி கலந்த நாளாக , அவனது நிஸ்சல தன்மையை உணர்த்தும் நாளாக கொண்டாடுகின்றனர்.

இந்த ஆதியோகி திருவுருவம் என்பது புது மதம் உருவாக்குவதற்கு, இல்லை. புது வழிபாட்டு முறை உருவாக்குவதற்காக இல்லை.  மனித குலம்  காணும் அணைத்து சிக்கல்களையும் தகர்த்தெறிய விஞ்ஞான அணுகுமுறை கொடுத்த ஆதியோகியை போற்றுவதற்காக. இதை   மதத்திலிருந்து பொறுப்புணர்வு நோக்கி அழைத்து செல்லும் இயக்கமா உருவாக்குகிறோம். ஏனெனில் எல்லா சிக்கல்களுக்கு தீர்வு நமக்குளே தான் இருக்கிறது . இந்த நுட்பமான தன்மை என்பது ஒரு விஞ்ஞானம். விஞ்ஞானம் என்றால் தர்க்க அறிவில் பிரித்து பார்ப்பதல்ல – அனைத்தையும் ஒன்றாக பார்ப்பது. அனைத்திலும் ஒன்றி கலப்பது. இதுதான் யோகா. ஒன்றாக இணைதல்.

ஒரு யோகி சிவன் சும்மா அமர்ந்திருப்பதை கண்டார்.  அந்த யோகி சிவனை சீண்டினார். சிவன் அவரை கண்டு கொள்ள வில்லை.  யோகி மேலும் சீண்டினார்.  என்னை பார்த்து பயமா என்றார். இதை கண்ட சிவன்  தனது

தலை முடியிலிந்து ஒரு பூதத்தை உருவாக்கினார். அந்த பூத்திடம்  அந்த யோகியை சாப்பிட சொன்னார். இதை கண்ட யோகி பயந்து சிவனிடம் தன்னை மன்னிக்குமாறு  மன்றாடினார்.  மனமிரங்கிய சிவன் பூத்திடம் அந்த யோகியை  விட்டு விட சொன்னார்  . யோகி தப்பித்து சென்றுவிட்டார். இப்போது அந்த பூதம்  சிவனிடம் நான் என்ன செய்வது என்று கேட்டது.  அந்த பூதம் அகோர  பசியுடன் இருந்ததைப் பார்த்த சிவன் நீ உன்னையே சாப்பிடு என்று சொன்னார் .

சிவன்  திரும்பி பார்ப்பதற்கு முன் அந்த பூதம் தன்னையே சாப்பிட்டு கொண்டிருந்தது. முழு உடலையும் சாப்பிட்டு கைகளை சாப்பிட்டு கொண்டிருந்தது. முகம் மட்டுமே எஞ்சி இருந்தது.

சிவன் இதனை கண்டு, தன்னையே முழுமையாக அளித்து கொண்ட அந்த  பூதத்தை பார்த்து மனமுறுகினார்.  தன்னையே சாப்பிட்ட இந்த முகம் எல்லா முகங்களுக்கும் சிறந்தது என்று அந்த பூதத்தை கீர்த்தி முகா என்றார். கீர்த்தி முகா என்றால் சிறந்த / புகழ்பெற்ற முகம் .  இன்றும் கோவில் முகப்புகளில்  தன் கைகளை சாப்பிட்டு கொண்டிருக்கும் முகம் , ‘கீர்த்தி முகா வை  பார்க்கலாம் . தன்னையே சாப்பிட்ட இந்த முகம்   இது கடுவுள்களுக்கு மேலானது.

இந்த இரவில் நீங்கள் உங்களை சாப்பிட வேண்டும்.  நான் என்ற தன்மையை முழுமையாக தள்ளி வைக்க வேண்டும்.  ஏதோ ஒன்றாக இல்லாமல் ஒன்னும் இல்லாத தன்மையாக இருந்தால் ,  இருந்தால் நீங்கள் சிறந்த முகமாக ஆக முடியும்”, என்றார்

அனைவருக்கும்  ஆதியோகியின் ருத்ராட்சம் பிரசாதமாக !

கடந்த (2017) மஹாசிவராத்திரியில் 112 அடி ஆதியோகி திருமுக பிரதிஷ்டையின்போது, தன்னார்வத் தொண்டர்களால் கோர்க்கப்பட்டு ‘லட்சத்து எட்டு’ ருத்ராட்சம் கொண்ட மாலை ஆதியோகிக்கு அர்ப்பணையாக அணிவிக்கப்பட்டது. இந்த ஓராண்டு காலம் அந்த மாலை ஆதியோகியின் உடலை அலங்கரித்து வந்தது. அந்த மாலையிலுள்ள ருத்ராட்ச மணிகள் அனைத்தும் இவ்வருட மஹாசிவராத்திரி விழாவிற்கு நேரடியாக வருகை தந்தவர்களுக்கு  ஆதியோகி பிரசாதமாக வழங்கப்பட்டது.

‘ஆதியோகி பிரதட்சிணம்’ !

மஹாசிவராத்ரி நாள் முதல் ஆதியோகி வளாகத்தை வளம் வரும் ஆதியோகி  பிரதட்சிணம் என்னும் முறை துவங்கியது.

குறிப்பிட்ட முறையில் மேற்கொள்ளப்படும் இந்த பிரதட்சிணம் (வலம் வருதல்)  ஆதியோகி  வளாகதில் துவங்கும்.   ஒருவர் ஒரு வருடத்திற்குள் 1, 3, 7, 21 அல்லது 112 ஆகிய எண்ணிக்கைகளில் பிரதட்சிணம்’ செய்யலாம்! நோயிலிருந்து விடுதலை, ஆன்மீகத்தில் மேன்மை, தடைகள் அகலுதல் போன்ற பல்வேறு பலன்களுக்காக வெவ்வேறு முறைகளில் இந்த பிரதட்சிணம் செயல்முறையை சத்குரு வடிவமைத்துள்ளார்.

More articles

Latest article