சென்னை;  சிம்பொனி இசை அமைத்து சாதனை படைத்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த  இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் இன்று  பாராட்டு விழா நடைபெறுகிறது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  நடைபெறும் இந்த விழாவில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட தமிழ்நாடு மட்டுமின்றி,  அண்டை மாநில  திரையுலகினர், அரசியல் கட்சியினர், மற்றும் வெளிநாட்டு கலைஞர்களும் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, இளையராஜாவின் பொன் விழாவுக்கு வரும் வெளிநாட்டு இசைக் கலைஞர்களை அழைத்துச் செல்ல தமிழ்நாடு அரசின் சார்பில் பிரத்யேக பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, இசைஞானி இளையராஜா,  2025ம் ஆண்டு  மார்ச் மாதம் லண்டனில் சிம்பொனி இசையை நிகழ்த்திசாதனை படைத்தார். இது உலக அளவில் அவருக்கு பெரும் புகழை சேர்ததது.   இதற்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்,   இசைஞானி  இளையராஜாவுக்கு, அவரது அரை நூற்றாண்டு இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில் அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி,  சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று மாலை 5.30 மணிக்கு சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் என்ற பெயரில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த பொன் விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சியினர் என ஏராளமானோர் பங்கேற்கின்றனர். மேலும்  அண்டை மாநிலங்களைச் சேர்ந்த,  தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பிறமொழி திரைக்கலைஞர்களும் விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது இந்தியாவின் பெருமை: லண்டனில் வெளியிட உள்ள சிம்பொனி இசை விருந்து உலகிலேயே தலைசிறந்ததாக இருக்கும்! இளையராஜா

இசையமைப்பது எனக்கு மூச்சு விடுவதைப் போல் இயல்பானது! ஐஐடி நிகழ்ச்சியில் இளையராஜா

சென்னையில் இசை ஆராய்ச்சி மையம்… ஐஐடி-யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தார் இசை விற்பன்னர் இளையராஜா

 இசைஞானி இளையராஜா உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கவுரவ டாக்டா் பட்டம்! காந்தி கிராம பல்கலை. விழாவில் பிரதமா் மோடி வழங்கினார்

இசையமைப்பாளர் இளையராஜா இசை அமைத்த நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் பாசுரங்கள் அடங்கிய ஆல்பம் வெளியீடு…